ஏப்ரல் 2021 தினமணி கதிரில் வெளிவந்த சிறுகதை.
வாய்க்காலில் சலசலவென்று ஓடும் தண்ணீரைப் போல் எங்கும் ஒரே பேச்சுச் சத்தம். அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதைப் போல் சிலர் கூட்டமாக நின்று கோசம் போட்டுக் கொண்டிருந்தனர். காலைப்பொழுது பரபரப்புக்குச் சற்றும் பஞ்சமில்லாமல் அந்த இடம் இயங்கிக் கொண்டிருந்தது.
“கொஞ்சம் அமைதியா இருங்க. கலெக்டர் வர்ற நேரமாச்சு” என அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்தவனின் குரலில் மெள்ளத் தலையுயர்த்தி, கண்கள் சுருக்கிப் பார்த்தார் அன்பரசு. அப்பொழுது தான் சர்வீசுக்குச் சென்று வந்த வண்டியைப் போல் தங்குதடையில்லாமல் அந்தப் பணியாளன் தனக்கு இடப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தான்.
காலம் மட்டுமே மாறுகிறது. அங்கு நடக்கும் காட்சிகள் மட்டும் கீறல் விழாத படச்சுருளைப் போல் தெள்ளத் தெளிவாக அப்படியே இருக்கின்றன என ஒரு பெருமூச்சுடன் திரும்பி முன்னால் இருந்த கட்டடத்தைப் பார்த்தார்….