ஏப்ரல் 2021 தினமணி கதிரில் வெளிவந்த சிறுகதை. வாய்க்காலில் சலசலவென்று ஓடும் தண்ணீரைப் போல் எங்கும் ஒரே பேச்சுச் சத்தம். அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதைப் போல் சிலர் கூட்டமாக நின்று கோசம் போட்டுக் கொண்டிருந்தனர். காலைப்பொழுது பரபரப்புக்குச் சற்றும் பஞ்சமில்லாமல் அந்த இடம் இயங்கிக் கொண்டிருந்தது. “கொஞ்சம் அமைதியா இருங்க. கலெக்டர் வர்ற நேரமாச்சு” என அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்தவனின் குரலில் மெள்ளத் தலையுயர்த்தி, கண்கள் சுருக்கிப் பார்த்தார் அன்பரசு. அப்பொழுது தான் சர்வீசுக்குச் சென்று…
ஒப்பீடு
ஆகஸ்ட் 2014 – ஓம் சக்தி நாளிதழில் லாவண்யா பெருமாள்சாமி என்ற பெயரில் வெளியானது என் பெயர் சுதாகர். நான் வருமான வரித்துறையில் வேலையில் இருக்கிறேன். இன்று மைதிலியைப் பெண் பார்க்க என் இரண்டு அண்ணன்கள், இரண்டு அண்ணிகள், தம்பி மற்றும் அம்மா புடைசூழ சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் மைதிலிக்குள் ஓர் அதிர்வு ஏற்பட்டதை அவளின் பட்டாம்பூச்சியைப் போன்று படபடக்கும் விழிகள் எனக்கு உணர்த்தின. அவள் விழிகளின் தாளத்திற்கு ஏற்ப என் இதயம் முரசு கொட்டியதை அவள்…